ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (10:11 IST)

போரில் கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.! காஸாவில் 24 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை..!!

kazha attack
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். நவம்பர் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.
 
இதனையடுத்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காஸாவில் போரால் இதுவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 
மேலும் 60,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.  போரில் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் போரில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.