வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:25 IST)

18 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடம்

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 17,998,419 என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 18 கோடியை நெருங்கிவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 11,317,100 என அதிகரித்துள்ளதாகவும், உலக நாடுகளில் கொரோனா மொத்த மரணங்கள் எண்ணிக்கை 687,783 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா உள்ள நிலையில் கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,764,318 எனவும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 157,898 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,708,876 எனவும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 93,616 எனவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,751,919 எனவும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37,403 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, பெரு, சிலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது