வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (16:31 IST)

விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.


 

 
பூமியில் பயிரிடப்படுவது போல விண்வெளியில் உள்ள சரவதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை நாசா விஞ்ஞானிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர் நிக்கோல் டம்பர் கூறியதாவது:-
 
நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட பணிகள் சிறிது மந்தமாகவே நடைப்பெற்றது. எனினும் அனைத்து வகை கீரைகளையும் வெற்றிகரமாக பயிர் செய்து விட்டோம்.
 
இலைகோஸ் கீரை வளர நான்கு வாரங்கள் ஆகும். அதன்பிறகு அதை அறுவடை செய்வோம். விண்வெளியில் இந்த செடிகளுக்கு குறைவான தண்ணீர் ஊற்றினாலே போது அது விரைவாக வளர்ந்து விடும், என்றார்.
 
மேலும் எதிர்காலத்தில் வேறு கிரகத்துக்கு விஞ்ஞானிகள் ஆய்வுக்கு செல்லும்போது அங்கு ஏற்படும் உணவு பிரச்சனையை தீர்க்கவே, இந்த முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.