புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (20:13 IST)

சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்

சீனாவின் ராக்கெட்டால் நிலவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: நாசா தகவல்
சீனாவின் ராக்கெட்டால் நிலவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த பல ஆண்டுகளாக சீனா அனுப்பிய ராக்கெட்டுக்கள் வானில் சுற்றி வந்த நிலையில் அந்த ராக்கெட்டின் 3 டன் எடையுள்ள உதிரிபாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக நிலவில் 65 அடி பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஆனால் நாசாவின் இந்த கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சீனா அனுப்பிய ராக்கெட்டுக்களின் உதிரி பாகங்கள் மோதி நிலவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது