1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (13:58 IST)

குழந்தைக்கு பெயர் வைப்பதான் முழு நேர வேலை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

baby name
குழந்தைக்கு பெயர் வைப்பதான் முழு நேர வேலை: லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
குழந்தைக்கு பெயர் வைப்பதையே முழு நேர வேலையாக செய்து வரும் இளம் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள இளம்பெண் டெய்லர் ஹம்ப்ரே என்பவர் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை தனது முழு வேலை செய்து வருகிறார். நியூயார்க் நகரை சேர்ந்த பல பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க இவரைத்தான் அணுகுகிறார்கள் என்றும் அந்த குழந்தையின் பிறந்த நேரம் தேதி பெற்றோர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து சரியான பெயரை அந்த குழந்தைக்கு அவர் தேர்வு செய்து கொடுக்கிறார்
 
ஒரு குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு 7 லட்சம் வரை அவர் சேவை கட்டணம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குழந்தைக்கு பெயர் வைப்பதையே முழு நேரமாக வேலை செய்து வரும் இளம் பெண் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது