வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (11:36 IST)

மாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு...

மிகப்பெரிய பாலைவன கடல் என பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. இது கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது. 
 
இங்குதான் என்வைட்டினெட் தீவு உள்ளது. என்வைட்டினெட் என்பதற்கு திரும்ப வராது என்பது அர்த்தமாகும். இந்த தீவிற்குள் செல்லும் யாரும் திரும்பி வருவதில்லையாம் எனவே இதன் பெயர் இப்படி வைக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு காலத்தில் இந்த தீவில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வப்போது வியாபாரத்திற்காக அவர்கள் அருகில் உள்ள தீவுகளுக்கும் வந்து சென்றுள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பின்னர் இந்த தீவில் இருந்து வெளியே வரும் மக்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்துள்ளது. 
இதனால், அருகில் இருந்த தீவின் மக்கள் இது குறித்து கண்டறிய அந்த தீவிற்கு சென்ற போது அவர்களும் திரும்பி வரவில்லை. இதனால், இது மர்ம தீவாக மாறியது. இந்த தீவு குறித்து ஆய்வு செய்ய ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் தனது குழுவோடு சில ஆய்வுகளை மேற்கொண்டார், நாட்கள் கடந்ததே தவிர அந்த விஞ்ஞானிகள் யாரும் திரும்பி வரவில்லை. 
 
அங்கிருக்கும் பழங்குடி குடிசைகள் எல்லாம் இருக்கிறதே தவிர மனித நடமாட்டம் இல்லை. அந்த தீவிற்கு பக்கத்தில் இருக்கும் தீவுகளை சேர்ந்த மனிதர்கள் அந்த தீவில் ஒரு பிரம்மாணட ஒளி தோன்று அப்படி தோன்றும் போது அங்கு யார் இருந்தாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் அப்படித்தான் இங்கு வந்த மனிதர்கள் எல்லாம் காணாமல் போயினர் என தெரிவித்துள்ளனர்.