மர்ம முறையில் கசிந்த எண்ணெய்: அமேசானை தொடர்ந்து அடுத்த அச்சுறுத்தல்!!
மர்ம முறையிலான ஒரு எண்ணெய் கசிவு எட்டு பிரேசிலிய மாநிலங்களில் கடற்கரைகளையும் மாசுபடுத்தியுள்ளது பெரும் அச்சுறுத்தாலாக கருதப்படுகிறது.
பிரேசிலின் வடகிழக்கு பிராந்தியத்தின் 3,000 கிலோமீட்டர் (1,860 மைல்) கடற்கரையோரத்தில் உள்ள கடற்கரைகள் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் இபாமா தெரிவித்துள்ளது.
அந்த எண்ணெய்யைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை எனத் தெரியவந்துள்ளது. பிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு அரசு முடக்கிவிட்டுள்ளது.
இப்போது வரை ஆறு கடல் ஆமைகள் மற்றும் ஒரு கடற்பறவை இறந்துள்ளது. எண்ணெய் பூசப்பட்ட சில பறவைகள் மற்றும் கடல் ஆமைகள் கழுவப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். மீன்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துள்ளதா என தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமேசான் காட்டுத்தீ பிரேசிலை இரு வழியாக்கிய நிலையில், அடுத்து இந்த மர்ம முறையிலான எண்ணெய் கசிவு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.