செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (09:33 IST)

ராவோடு ராவாக இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண்: பதற்றத்தில் இலங்கை!

நேற்று நள்ளிரவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைச்சக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் யாழ்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடிக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தான் இடிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பகுதியில் மாணவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
 
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.