செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (18:25 IST)

மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட சிங்கப்பூர் பிரதமர்: மோடி செய்வாரா?

மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்ட சிங்கப்பூர் பிரதமர்:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மனித இனத்தையே அச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டு பிடித்துள்ள நிலையில் பல நாடுகள் தடுப்பு ஊசியை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் முதல் நபராக கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள், பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். கொரோனா தடுப்பூசி நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்றும் அதனால் தயவு செய்து அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை தான் போட்டுக் கொண்டால் தான் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் என்ற வகையில் அவர் இதனை செய்துள்ளார். இதேபோல் இந்திய பிரதமர் மோடி அவர்களும் மக்கள் முன்னிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்கள் முன்னிலையில் போட்டுக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்