வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 16 மே 2017 (16:36 IST)

MP3 பாடல்களுக்கு ஆப்பு வைத்த ஆப்பிள்

இணையதளம் மூலம் அனைவரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய பாடல்கள் பெரும்பாலும் MP3 வகைதான். உரிமம் முடிவடைவதன் காரணமாக இனி MP3 வகை பாடல்கள் கிடைக வாய்ப்பிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
பாடல்கள் என்றால் அது MP3தான். அந்த அளவிற்கு இந்த MP3 வகை என்பது எல்லோரையும் எளிதில் கவர்ந்தது. எல்லா மின்னணு சாதனங்களிலும், இதில் MP3 வகை உண்டு என குறிப்பிடும் அளவிற்கு சிறப்பெற்றது MP3. 
 
இசை மின்னணு சாதனங்களில் இசை ரசிகர்கள் வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் இந்த MP3 வகையாக தான் இருக்கும். MP3 வகை கோப்புகளின் அளவு குறைந்த அளவில் இருப்பதால் எல்லோரும் MP3 வகையை பயன்படுத்தி வந்தனர்.
 
MP3-ஐ விட aac,wav, போன்ற வகைகள் இதைவிட நல்ல ஒலி திறன் உடையது. இதனால் ஆப்பிள் ஐபாட் போன்ற மியூசிக் சாதானங்களில் தற்போது MP3 அல்லாது மற்ற வகைகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் MP3 தொடர்பான காப்புரிமைகளுக்காக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால். இனி MP3 வகை பாட்ல்கள் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் பழைய MP3 வகை பாடல்களுக்கு ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து MP3 வகையை விட சிறந்த நல்ல தரம் கொண்ட வகையை அறிமுகம் செய்யவுள்ளனர். இசை பிரியர்களுக்கு இது ஒரு பெரிய இழப்பு. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் aac வகை இந்த MP3 வகையின் உரிமம் ரத்தாக ஒரு வகையில் காரணம். ஆப்பிள் நிறுவனத்தின் aac வகை மெல்ல சந்தையை ஆக்கிரமித்தது. ஒலி திறன் நன்றாகவும் இருந்தது. இதன் மூலம் MP3 வகையை காலி செய்துவிட்டது.