புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (08:46 IST)

துபாய், அபுதாபியில் செட்டில் ஆக நினைக்கும் மக்கள்! – சர்வேயில் ஆச்சர்ய தகவல்கள்!

துபாய், அபுதாபியில் செட்டில் ஆக நினைக்கும் மக்கள்! – சர்வேயில் ஆச்சர்ய தகவல்கள்!
உலக மக்கள் பலர் புலம்பெயர்ந்து வசிக்க விரும்பும் நாடுகள் குறித்த சர்வேயில் துபாய் முதலிடம் பெற்றுள்ளது.

வரலாற்று காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை பல்வேறு மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குடிப்பெயர்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் தற்போதைய நவீன காலத்தில் மக்கள் பலருக்கு குறிப்பிட்ட சில நாடுகளுக்கு குடிப்பெயர்வது என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று உலக மக்கள் அதிகம் குடிப்பெயர விரும்பும் நாடுகள் குறித்து சர்வே எடுத்துள்ளது. இதில் ஆச்சர்யப்படும் வகையில் பல மக்கள் துபாயில் செட்டில் ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அடுத்து அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக வளைகுடா நாடுகள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மக்கள் பலரது கவனம் இந்த நாடுகள் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.