ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (18:47 IST)

பழிவாங்குதை கைவிட்டு கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்- ஆர்.எஸ்.பாரதி

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 
  

அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்ற பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்து விசாரித்த பின்னர் சென்னையில் கைதான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  

மேலும், ஜூன் 1ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி ஜாமீன் பெற மனு செய்யலாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில், இன்று  தேவைப்படுகிறபோது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அப்போது ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

அதிமுக அரசு எங்கள் மீது காட்டும் பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டு கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.