1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 1 ஜூன் 2020 (23:32 IST)

எளிமையான திருமணம் செய்து... எழைகளுக்கு உதவிய மணமக்கள் !

கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் வசிப்பவர் ரஞ்சித். இவருக்கு ஈரோடு பள்ளிப்பாளையத்தில் வசித்துவரும் செல்வி என்ற பெண்ணுக்கும் இன்றுகாலை எலச்சிபாளையம் என்ற பகுதியில் திருமணம் நடைபெற்றது.

இருவரும்  கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா காரணமாக தள்ளிபோன திருமணத்தை இன்று எளிமையானமுறையில் நடத்தியன் மூலம் அதிகப்பொருட்செலவில் நடக்கவிருந்த திருமணச் செலவுக்குப் பதிலாக அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர்.