ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (12:55 IST)

சினிமா தியேட்டர், ஸ்கூட்டர்... இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த துயர சம்பவத்தால் 300க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். 
 
மேலும், அச்சுறுத்தல்கள் இருப்பதால் காவல்துறை தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
அந்த வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. இதனால், போலீஸார் மேலும் கவனத்துடன் இருக்கின்றனர். 
இந்நிலையில், இன்று ஒரு சினிமா தியேட்டர் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது. ஆம், தலைநகர் கொழும்பு நகரிலுள்ள வெல்லவட்டா என்ற பகுதியில், சவாய் என்ற திரையரங்கு உள்ளது. 
 
அந்த தியேட்டர் முன்பு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. வெடிகுண்டை செயலிழக்க முடியாத காரணத்தால், அதை வெடிக்க வைத்து அழித்தனர். 
 
இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.