செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (22:06 IST)

விஜய்சேதுபதி- நயன்தாரா பட அடுத்த புதிய அப்டேட்

விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’  #KaathuVaakulaRenduKaadhal படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
 
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் .

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல்  #KaathuVaakulaRenduKaadhal படத்தின் 2 வது சிங்கில்#TwoTwoTwo
இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்த நிலையில், இன்று இப்படத்தைத் தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தின் 2 வது சிங்கில் பாடல் நாளை மதியம் 2:22 மணிக்கு ரிலீஸாகும் எனக் கூறியுள்ளனர்.

இதெல்லாம் 2 எண்களையே மையமிட்டு கூறியுள்ளதால் இப்பாடல் #TwoTwoTwo  என ஆரம்பிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.