சூடானில் 87 பேரின் உடல்கள் புதைகுழியில் கண்டெடுப்பு!
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவத்தினரும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு படையினர் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி உள் நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூடானில் மேற்குப் பகுதியில் டார்பூரில் 87 பேரின் உடல்கள் அங்குள்ள ஒரு புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
இதுபற்றி ஐ நா. சபை இது வெகுஜன படுகொலை என்று கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.