செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (12:05 IST)

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா மகன் மறைவு: 26 வயதில் மறைந்த பரிதாபம்!

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா மகன் மறைவு: 26 வயதில் மறைந்த பரிதாபம்!
மைக்ரோசாப்ட் சி.இ.ஓ  சத்ய நாதெல்லா என்பவரின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் பிறவியிலேயே பெருமூளை வாதம் என்ற நோயால் அவதிப்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது. அவர் பிறந்தது முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதனால் அவரது குடும்பத்தினருக்கும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்
 
மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து தங்களது ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயில் செய்தியில் ஜெயின் நாதெல்லா ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது