புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:34 IST)

பில் கேட்ஸுக்கு பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருது!

பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' என்ற இந்த விருதை பில் கேட்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. 

 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர், என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 
 
அவரது பல சாதனைகளுக்கு மட்டுமின்றி, அவரது தொண்டுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். போலியோவை ஒழிப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு, எனது நாட்டின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாக வருகை தந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுக்கு, அந்நாட்டின் இரண்டாவது உயரிய விருதான குடிமகன் விருது வழங்கப்பட்டது. போலியோ ஒழிப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' என்ற இந்த விருதை பில் கேட்ஸ்க்கு அந்த நாட்டின் அதிபர் ஆரிஃப் அல்வி வழங்கினார்.