புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (16:11 IST)

அந்த நடிகைக்கு விவாகரத்தா? கொளுத்தி போட்ட விஷமிகள்!

நடிகை பூமிகா அவரின் கணவரை விவாகரத்து செய்ய போவதாக வதந்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் 2007–ல் யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ஒதுங்கி இருந்த பூமிகா நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘யூடர்ன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன் கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் இணையத்தில் வெளியாகின. ஆனால் இதை பூமிகா தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை என பூமிகா புலம்பி வருகிறாராம்.