வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (19:47 IST)

மழைக்காலத்தில் அதிக சிறுநீர் வெளியேற என்ன காரணம்?

urine
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிறுநீர் குறைவாகவே வெளியேறும். ஆனால் குளிர் காலத்தில் வியர்வை வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் சிறுநீர் வழியாக மட்டுமே உடலிலுள்ள கழிவுகள் வெளியேறுகின்றன
 
வியர்வை வழியாக வெளியேற முடியாத நீரை சிறுநீர் வழியாக உடல் வெளியேற்றுகிறது. இதனால்தான் கோடை காலத்தை விட குளிர்காலம் மற்றும் மழை காலத்தில் அதிக சிறுநீர் வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து சிறுநீர் அதிகமாக வெளியேறி கொண்டிருந்தால் வெப்பநிலை குறைவு உள்பட ஒரு சில தாக்கங்கள் ஏற்படும். எனவே உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிகச் சிறுநீர் கழிப்பதால் உடல் சோர்வு சுவாச கோளாறுகள் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். குளிர் காலங்களில் உணவு கட்டுப்பாட்டிலும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலங்களில் அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால் சிறுநீரோடு சேர்ந்து கால்சியம் சத்தும் வெளியேறி விடும் என்பதால் கால்சியம் அதிகமாக இருக்கும் உணவை உண்ண வேண்டும் 
 
குளிர் காலத்தில் தாகம் இல்லை என்பதால் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர் காலமோ கோடை காலமோ தினமும் தண்ணீரை அதிகமாக குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்
 
Edited by Siva