அடர்ந்த மூடுபனியால் 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பெரும் பரபரப்பு!
அடர்ந்த மூடுபனியால் 200 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பெரும் பரபரப்பு!
அடர்ந்த மூடுபனி காரணமாக சீனாவின் முக்கிய பகுதியில் 200 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியா உட்பட பல நாடுகளில் மூடுபனி ஏற்பட்டு உள்ளது என்பதும் அதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
குறிப்பாக டெல்லி போன்ற மாநிலங்களில் மிக அதிகமாக மூடுபனி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் மூடு பணி காரணமாக 200க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Edited by Siva