வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:17 IST)

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு: ஜப்பான் அரசு அறிவிப்பு

japan
சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப் படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது உறுதி செய்யப்பட்டால் விமான நிலையத்திலேயே அந்த நபர் தனிமைப்படுத்தப் படுவார் என்றும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்
 
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran