வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (09:16 IST)

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்ய முடிவு… இந்திய அணியில் நடந்த மாற்றம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்று உள்ளது. இதையடுத்து தொடரின் போக்கை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸி. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இந்திய அணியில்  இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் பரத்தே விக்கெட் கீப்பராக இந்த போட்டியிலும் தொடர்கிறார்.