திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (19:07 IST)

பள்ளி மாணவிகளிடம் ஆபாச சாட்டிங்: நிர்வாண புகைப்படங்களை பெற்ற காமுகன்!

பள்ளி மாணவிகளிடம் ஆபாச சாட்டிங்: நிர்வாண புகைப்படங்களை பெற்ற காமுகன்!

பிரிட்டனில் பள்ளி மாணவிகளிடம் இணையதளம் மூலமாக ஆபாசமாக சாட்டிங் செய்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
மொரிஷியஸ் நாட்டை சேர்ந்த யோகன் ராம்செல்வன் என்ற 30 வயதான நபர் வேறொரு நபரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தான் ஜஸ்டின் பீபர் போல் முகத்தோற்றத்துடன் இருப்பதாக மாணவிகளை நம்ப வைத்து அவர்களுடன் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்துள்ளார்.
 
சமூக வலைதளங்கள் மூலம் 12 முதல் 17 வயதான மாணவிகளை குறிவைத்து இவர் தனது வலையில் வீழ்த்தி வந்துள்ளார். தன்னுடைய வலையில் விழும் பெரும்பாலானா மாணவிகளிடம் இருந்து அவர்களின் நிர்வாண புகைப்படத்தை பெற்றிருக்கிறான் அந்த கொடூரன்.
 
அந்த மாணவிகளுடன் இணைய கேமராவில் ஆபாச வார்த்தைகளை கூறி பாலியல் செய்கைகள் செய்ய தூண்டியுள்ளார். இதற்கு மறுக்கும் மாணவிகளை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி வந்துள்ளார் இவர். இதுகுறித்த புகாரில் யோகன் ராம்செல்வனை பற்றி போலீசார் விசாரணை செய்ய ஆரம்பித்தனர்.
 
மான்செஸ்டரில் வசித்து வரும் இவர் சிறுமிகளுடன் சாட்டிங் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார். அவர் பிரிட்டன், நியூசிலாந்து, பிரேசில், ஐக்கிய அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள சிறுமிகளிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
 
இவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் கடந்த மார்ச் மதம் கைது செய்தனர். அவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை கைப்பற்றினர். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து தற்போது ராம்செல்வனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.