1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:07 IST)

சிறுமி கூட்டு பலாத்காரம்: குற்றவாளிகளை ஹெலிகாப்டர் வைத்து கைது செய்த போலீசார்!

சிறுமி கூட்டு பலாத்காரம்: குற்றவாளிகளை ஹெலிகாப்டர் வைத்து கைது செய்த போலீசார்!

ஜெர்மனியின் தனியாக சென்ற சிறுமியை மூன்று பேர் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றவாளிகளை அந்நாட்டு போலீசார் சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் மூலம் தேடி கைது செய்துள்ளனர்.


 
 
நேற்று முன்தினம் ஜெர்மனியின் ரயில் நிலையம் ஒன்றின் அருகில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அந்த கூட்டத்துக்கு 16 வயது சிறுமி உட்பட ஆப்கான் நாட்டில் இருந்து அகதிகளாக வந்த 27 வயது, 18 வயது, 17 வயது உடைய மூன்று பேரும் வந்திருந்தனர்.
 
அந்த கூட்டம் முடிந்ததும் அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அந்த 16 வயது சிறுமி தனது வீட்டுக்கு செல்ல தனியாக ரயில் நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தார். இதனை கவனித்த அந்த மூன்று அகதிகளும் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றனர்.
 
சிறுமி ஒதுக்கு புறமாக ஒரு இடத்துக்கு சென்றதும் அந்த சிறுமி மீது அவர்களில் இருவர் பாய்ந்தனர். அவர்களை சிறுமியால் எதிர்க்க முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் இருவரும் சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். பின்னர் மூன்றாவதாக 18 வயதான அவர்களில் ஒருவன் சிறுமியை பலாத்காரம் செய்ய வந்தபோது அங்கு சிலர் வந்தனர்.
 
இதனையடுத்து அவர்கள் சிறுமியை விட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தகவலறிந்த போலீசார் ஹெலிகாப்டர் மூலமாக அந்த குற்றவாளிகளை தேடினர். சில மணி நேரத்தில் அந்த மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது கற்பழித்த இரண்டு பேரையும் காவலில் வைத்தும் 18 வயதான நபரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டனர்.