திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:07 IST)

போர் வியூகங்கள் தயார்: உலக போருக்கு அமெரிக்கா அடிக்கல்!!

வடகொரியாவிற்கு எதிராக போர் வியூகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
கடந்த வாரம், ஜப்பான் மீது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இதனால் மேலும் கோபமடைந்த அமெரிக்கா தென் கொரிய பாதுகாப்புத்துறையுடன் அவரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
 
இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் அணு ஆயுத திட்டத்தை கொரியா தீபகற்பத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியின.
 
வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் மற்ற சில உலக நாடுகள் இணைந்து பல பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் அடுத்த படியாக போருக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.
 
மேலும், அடுத்த மாதம் விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொரியா தீபகற்பம் நோக்கி அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் மீண்டும் உலக போருக்கான அடிக்கல்லை அமெரிக்கா நட்டுவருவதாக பரவலாக பேசப்படுகிறது.