1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:41 IST)

72 வயது முதியவரின் வயிற்றில் இருந்த மீன் முள் – ஸ்கேனில் அதிர்ச்சி முடிவு !

ஜப்பானில் 72 வயது முதியவரின் உடலில் இருந்த மீன் முள்ளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அவரது வயிற்றில் மீனின் முள் ஒன்று இருந்துள்ளது. பின்னர் அதை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.மீன் முள் அவரது குடலில் குத்தி காயப்படுத்தியதால் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.