திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 ஜூலை 2020 (12:13 IST)

இலைகளால் ஆன இதயம் – துப்புரவு தொழிலாளியின் வைரலான புகைப்படம்!

துபாயில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய தெலங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர் மனைவியைப் பிரிந்து துபாய்க்கு சென்றுவிட்டார். அங்கு துப்புரவு தொழிலாளியாகிய பணிவாற்றி வரும் அவர், கொரோனா லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல சாலைகளில் காய்ந்த சருகுகளை துப்புரவு செய்த அவர், அந்த சருகுகளைக் கொண்டு இதயம் போல வடிவமைத்து அதையே சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அதை யாரோ புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்ற அந்த படம் வைரலானது.

அதன் பின்னர் அந்த நாட்டு தொலைக்காட்சி சேனல் ரமேஷை பேட்டிக் கண்ட போது ‘அப்போது என் மனைவி நினைவு வந்ததால் அவ்வாறு செய்தேன்’ என கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். மேலும் விரைவில் விடுமுறை கிடைத்ததும் தாய்நாட்டுக்கே செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.