1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:42 IST)

ஷாப்பிங் மாலில் கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய மழைநீர்: பெண் காயம்

சீனாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் திடீரென ஏற்பட்ட புயல் மழையால் புகழ்பெற்ற ஒரு ஷாப்பிங் மாலின் கூரை பிய்த்து கொண்டு போக, அந்த இடைவெளியே மழைநீர் மாலுக்குள் கொட்டி ஒரு பெண் வாடிக்கையாளர் இழுத்து கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
 
சீனாவில் உள்ள டங்குவான் என்ற நகரில் கடந்ஹ ஞாயிறு அன்று பைலு என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. அப்போது அந்நகரில் உள்ள புகழ்பெற்ற ஹுய்க்ஸிங் என்ற ஷாப்பிங் மாலின் மேற்கூரையை சூறாவளி காற்றால் பிய்த்துக் கொண்டு சென்றது. இதனையடுத்து மழை நீர் அருவி போல் திடீரென ஷாப்பிங் மாலுக்குள் கொட்டியது. அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அந்த மழை நீரினால் தரையில் விழுந்து பல அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
 
இதனையடுத்து மாலின் செக்யூரிட்டிகள் அந்த பெண்ணை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த ஷாப்பிங் மாலில் கேன்வாஸ் வகை மேற்கூரை அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது