திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (20:01 IST)

அதிபரை கொல்ல சதி செய்த துணை அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கய்யூமை கொல்ல சதி வேலையில் ஈடுபட்ட முன்னாள் துணை அதிபர் அஹமத் அடீப்-க்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


 
 
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி டெல்லியில் இருந்து அதிவேக படகு மூலம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கய்யூம் அவரது மனைவியுடன் டெல்லியில் இருந்து மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார்.
 
அப்போது அவர் சென்ற படகு வெடித்து சிதறியது. இதில் அதிபர் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது மனைவி படுகாயமடைந்தார். இந்த படகு வெடித்தது குறித்தது குறித்த விசாரணையில் இது துணை அதிபர் அஹமத் அடீப்-ன் சதி என தெரியவந்தது.
 
இதனையடுத்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று அவருக்கு தீர்ப்பளித்தது. இதில் அவருக்கு சதி செயலில் ஈடுபட்டதுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.