திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (16:29 IST)

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் எப்போது?

malaysia
மலேசிய நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டு உள்ளதை அடுத்து அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இன்னும் 60 நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த 60 நாட்களுக்குள் மலேசியாவில் 15வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை இருக்கும் நிலையில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மலேசிய நாடாளுமன்றத்தில் இஸ்மாயில் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது
 

Edited by Mahendran