வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (12:30 IST)

அமைச்சராகிறார் பிரதமர் மஹிந்தாவின் மகன்: இலங்கையில் பரபரப்பு

அமைச்சராகிறார் பிரதமர் மஹிந்தாவின் மகன்
சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பதும், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி வெற்றி பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து சமீபத்தில் மகிந்த ராஜபக்ச அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ஏற்கனவே அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச தான் இலங்கையின் அதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அண்ணன் தம்பி ஆகிய இருவருமே பிரதமர் மற்றும் அதிபர் பதவியில் இருப்பதால் குடும்ப அரசியல் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக இலங்கையில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றன
 
இந்த நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை பட்டியலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே என் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நமல் ராஜபக்ச விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச அவரது மகன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய மூவரும் இலங்கையின் முக்கிய பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது