காணொலி மூலம் பிரதமர் மோடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

modi edappadi
பிரதமர் மோடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
siva| Last Updated: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (11:19 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 8 முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய உள்ளார் என்ற செய்தி நேற்று வந்தது

இந்த நிலையில் சற்று முன் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரனோ தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைக்கிறார்.

மேலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து தொடக்கம் தொடர்பாகவும் அவர் பிரதமரிடம் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதமருடனான ஆலோசனையை முடித்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :