புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (20:36 IST)

’உடலுறவின் போது ’ மாடியில் இருந்து கீழே விழுந்த காதல் ஜோடி!

இன்றைய உலகில் நவீன நாகரிகத்தில், டேட்டிங் செல்வது, டிரீட் கொடுக்க ஸ்டார் ஹோட்டல் பாருக்கு நண்பர்களை அழைத்துப்போவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  உடலுறவு கொண்ட காதல் ஜோடி மாடியில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வேடார் நாட்டில் உள்ள ஒரு நகரைச் சேர்ந்த பெண், தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அதில்,தனது நண்பர்கள், உறவினர்களுடன் காதலரையும் அழைத்துள்ளார். மதுபானம் பரிமாறப்பட்டு, உணவு விருந்து எல்லாம் முடிந்த பிறகு, நண்பர்கள்,உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர்.
 
அப்போது, காதல் ஜோடி இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த ஜோடி 3 வது தளத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அருகில் உள்ள மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார். இருவரின்  உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.