பெரும் வீழ்ச்சியை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு: பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

Last Updated: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:21 IST)
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன் கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.55 ஆக இருந்தது. நேற்று 26 காசுகள் சரிந்து 71.81 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது இன்று காலை இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 22 காசுகள் சரிந்து, ரூ.72.03 என்று இருந்ததாக கூறப்படுகிறது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை புள்ளிவிவரங்களின் படி, அந்நிய முதலீட்டாளர்கள், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும் ஜப்பானிலும் முதலீடு அதிகரித்துள்ளது.

இது குறித்து பொருளாதார வல்லுநர்கள், அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறியதே இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு காரணம் என தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :