வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (19:20 IST)

'செல்பி’யால் மீண்டு வந்த வாழ்க்கை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது செல்பியால் பல சங்கடங்களை சந்தித்துவரும் சூழ்நிலையில் அதே செல்பி ஒருவருடைய ஆயுள் காலச் சிறை தண்டனையிலிருந்து மீட்டுள்ளது.
டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கடந்த வருடம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 
 
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது : ’கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் தன் பள்ளிக்காலத் தோழியை தாக்கியதால்தான் இந்த கைது நடவடிக்கை  நடந்துள்ளது ’என தெரிவித்தனர். பின் நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜாமீன் பெற்று வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபருக்கு கடவுள் போல உதவியது ஒரு செல்பிபோட்டோ. காரணம் அந்த பெண் தோழி கிறிஸ்டோபர் தன்னை தக்கியதாக புகார் கூறப்பட்ட அதே தேதியில்தான் கிறிஸ்டோபர் தன் பெற்றோருடன் அந்த புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டதை முக்கிய சான்றாகக் காட்டி இவ்வழக்கிலிருந்து அவர் விடுபட்டார்.
 
இதனால் கிறிஸ்டோபர் குடும்பம் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.