1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 20 மே 2023 (20:27 IST)

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம்- ஜி 7 நாடுகள்

g7
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி -7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளின் ஜி7  உச்சி மாநாடு   நேற்று தொடங்கி வரும் மே 21 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
 

இதில்,  உறுப்பு நாடுகளான கனடா,பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன.

இந்த நிலையில், மேற்கண்ட 7 நாடுகள் இல்லாது இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  கடந்தாண்டு உக்ரைன் மீது அதிபர் புதின் தலைமையிலான ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டைத் தாண்டி போர் நடைபெற்று வரும்  நிலையில்  இன்னும் சமாதானம் எட்டப்படவில்லை.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேச நாடுகள் கூட்டமைப்புகள் நிதியுதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகின்றன.இதனால் உக்ரைன், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜி7 உறுப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில்  நடைபெற்று வரும் நிலையில், இப்போர் குறித்து, உறுப்பு நாடுகள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ‘’ரஷியாவின் சட்டவிரோதமான போரையொட்டி உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில்,  உறுப்பு நாடுகளின் குழு தலைவர்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும், உக்ரைனுக்கு தேவையான  நிதியுதவி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், இப்போரை தொடங்கிய ரஷ்யாவே போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும்’’ என்று கூறியதாகத் தகவல் வெளியாகிறது.