பலூனை பறக்கவிட்டா சுட்டுத்தள்ளுவோம்..! – வித்தியாசமான மோதலில் தென்கொரியா – வடகொரியா!
வடகொரியா பறக்கும் பலூன்களில் குப்பையை நிரப்பி தென்கொரியாவுக்குள் அனுப்புவோம் என மிரட்டியுள்ள நிலையில் அதை சுட்டுத்தள்ள எல்லையில் ராணுவத்தை நிறுத்தியுள்ளது தென்கொரியா.
தென்கொரியா, அமெரிக்காவுடன் சேர்ந்து போர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தென்கொரியா, அமெரிக்கா நாடுகள் கண்டித்து வருகின்றன. இதனால் தொடர்ந்து வடகொரியா – தென்கொரியா இடையே மோதல் மனநிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வடகொரியா பிளாஸ்டிக் குப்பைகள், மாட்டுசாணம் உள்ளிட்ட கழிவுகளை பறக்கும் பலூனில் ஏற்றி தென்கொரியாவுக்குள் அனுப்பியது. இதனால் தென்கொரியாவின் பல பகுதிகளில் குப்பைகளாகியது. அமெரிக்காவுடனான தென்கொரியாவின் உறவை எச்சரித்து இந்த செய்கையை செய்த வடகொரியா தற்காலிகமாக பலூன் விடுவதை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் குப்பை பலூன்களை அனுப்ப உள்ளதாக தென்கொரியாவை எச்சரித்துள்ளது வடகொரியா. இதனால் எல்லையில் தென்படும் குப்பை பலூன்களை சுட்டு வீழ்த்த எல்லையில் ராணுவத்தை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளதாம் தென்கொரியா. இருநாடுகளும் இப்படி பலூன் விட்டு சண்டைபோட்டுக் கொள்ளும் சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K