வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 மே 2025 (10:14 IST)

இந்தியாவை கைப்பற்றி, பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம்! - பாகிஸ்தான் செனட்டர் பேச்சால் சர்ச்சை!

Pakistan Senetor

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் செனட்டர் பேசியுள்ள கருத்துகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’

 

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பல தடைகளை அறிவித்த நிலையில் ராணுவமும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர் ஏற்படாமல் தடுக்க பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் உள்ளனர்.

 

இந்நிலையில் பாகிஸ்தான் செனட்டர் பல்வாஷா முகமது ஸைக்கான் இந்தியா குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நாங்கள் ஒன்று வளையல் அணிந்துக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவை கைப்பற்றியதும், அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கான செங்கல்லை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். ராணுவ தளபதி அசிம் முனிர் அங்கு முதல் அஸானை ஓதுவார்” என பேசியுள்ளார்.

 

ஏற்கனவே இரு நாடுகளிடையே போர் பதற்றம் காணப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பாகிஸ்தான் செனட்டர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K