1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (21:45 IST)

இலங்கை பாராளுமன்றத்தை திடீரென முடக்கிய கோத்தபயா! பெரும் பரபரப்பு

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சே, அதிபர் பொறுப்பை ஏற்றார் என்பதும் முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியாவுக்கு வருகை தந்து இந்திய தலைவர்களை சந்தித்துப் பேசினார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி அதாவது நேற்று இலங்கை பாராளுமன்றம் கூட இருந்த நிலையில் திடீரென ஒரு மாதத்திற்கு பாராளுமன்றத்தை முடக்க கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்
 
இலங்கை அரசியல் சாசன விதிப்படி பாராளுமன்றத்தை முடக்கவோ அல்லது ஒத்தி வைக்கவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு என்பதால் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் ஒரு மாதம் பாராளுமன்றத்தை அவர் முடக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பாராளுமன்றம் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் பாராளுமன்றத்தை முடக்கியது ஏன் என்பது குறித்த காரணத்தை கோத்தபய ராஜபக்சே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது