வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (11:59 IST)

இந்திய பொருளாதாரம் சரிவு; இலங்கைக்கு வாரி வழங்கும் பிரதமர்!

இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கைக்கு நிதியளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில் ’இது பொருளாதார சரிவு அல்ல வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்துள்ளது” என தொடர்ந்து கூறி வருகிறது.

கடந்ர்க 2017-18ல் 8.1 ஆக இருந்த ஜிடிபி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2019ன் முதல் காலாண்டில் 5 புள்ளிகளாக இருந்தன. தற்போது 2019-20ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் புள்ளி விவரத்தில் ஜிடிபி புள்ளிகள் 4.1 ஆக குறைந்துள்ளன. தொடர்ந்து ஜிடிபி புள்ளிகள் குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிடும் என எதிர்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

நேற்று இலங்கை அதிபரை சந்தித்த பிரதமர் மோடி இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த 872 கோடி ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை பொருளாதாரத்தை காப்பாற்ற வாரி இறைக்கும் பிரதமரை என்ன சொல்வது என எதிர்க்கட்சிகள் நொந்து கொள்கின்றனவாம்!