வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:28 IST)

"லொஸ்லியவை கழுவி ஊற்றும் இலங்கை தமிழர்" இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் 3-வது சீசனில் ஆரம்பத்திலே ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுத்த லொஸ்லியா வீட்டிற்குள் நுழைந்த 3 - வது நாளிலேயே ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளராக பார்க்கப்பட்டார். ஒருவரின் குணம் என்னவென்றே தெரியாமல் முக பாவனையை வைத்து ஆர்மி உருவாக்கி கொண்டாடினார்கள் அவரது ரசிகர்கள். 


 
பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது உண்மை முகம் வெளிச்சத்திற்கு வர லொஸ்லியவை அவரது ரசிகர்களே வெறுக்க தொடங்கினர். மேலும் கவின் உடன் சேர்ந்து நட்பாக பழகுகிறேன் என்று கூறி இல்லாத பொல்லாத வேலையெல்லாம் செய்து வந்ததால் இவர் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 
 
இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க துவங்கினர்.  மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் கூட லாஸ்லியாவிற்கு கால் செய்த ஒரு ரசிகை நீங்கள் எதற்கு பிக் பாஸ் வந்தீர்கள் என்று கூட கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இலங்கை தமிழ் மக்களும் லொஸ்லியாவின் நடவடிக்கையால் வெறுப்பாகி அவரை கிண்டடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் "பல் தேய்க்காம ஆடு, லிப்ஸ்டிக் போட்டு கொண்டு பாடு  இல்லனா கவினோடு ஓடு" என லொஸ்லியவை  பற்றி படு பங்கமாக ஒருவர் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.