திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2018 (18:06 IST)

வரலாற்றின் முதல் முறையாக தென் கொரியா பயணிக்கும் வடகொரிய அதிபர் தங்கை!

தென் கொரியாவில் இந்த வாரம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் வட கொரியா கலந்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், வடகொரிய அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங் தென் கொரியாவுக்கு செல்ல இருக்கிறார்.
 
இந்த பயணத்தை வடகொரியா அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆணு ஆயுத சோதனை விவகாரத்தில், தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் போக்கு நிலைத்து வந்தது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவியது. 
 
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வட கொரிய கலந்துக்கொளவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடிந்ததால், கொரிய நாடுகள் இரண்டும் ஒன்றாக போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளது.