தென் கொரியாவுடன் சமாதான விழாவில் பங்கேற்க வடகொரியா மறுப்பு...
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கவுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் நீடித்து வந்த மோதல் போக்கு சற்று குறைந்துள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதே போல் அரசியல் திட்டங்களிலும் இரு நாடுகளும் ஒன்றிணைய உள்ளதாவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக கலாசார விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒப்புதல் அளித்திருந்த வடகொரியா அதிபர் தீடிரென தென் கொரியாவுடன் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது, என்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகவே இந்த முடிவெடுத்துள்ளேன் என புறக்கணிப்பிற்கு பதிலளித்துள்ளார்.