திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (08:26 IST)

சிங்கப்பூர் சந்திப்பில் நான் கொல்லப்படலாம்: வடகொரிய அதிபர் அச்சம்

எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து அதற்காக சிங்கப்பூரில் வரும் 12ஆம் தேதி இரு தலைவர்களும் சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் சிங்கப்பூர் சந்திப்பின்போது தான் தென்கொரியர்களால் கொல்லப்படலாம் என்ற அச்சத்தை வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் கிளப்பியுள்ளார். இதனால் இந்த சந்திப்பு நடக்கவுள்ள செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
 
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவுடன் வடகொரிய அதிபர் கிம், தன்னுடைய மூன்று தளபதிகளை கடந்த ஞாயிறு அன்று திடீரென மாற்றினார். தென்கொரியாவினர் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும், இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கூடும் என்றும் கிம் கிளப்பியுள்ள சந்தேகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தென்கொரியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.