திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (15:27 IST)

காலா படத்தை முகநூலில் நேரலை செய்த வாலிபர் கைது....

நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியான காலா திரைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் நேரலையாக வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகாலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணைய தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை  காலா படத்தை தொடக்கம் முதல்வர் சுமார் 45 நிமிடம் தொடர்ச்சியாக தியேட்டரில் இருந்து ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் முகநூலில் நேரலை செய்தார். இந்த செய்தி காலா படக்குழுவினரையும், தமிழ் சினிமா பட உலகினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. 
 
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த காலா பட இயக்குனர் பா. ரஞ்சித், அந்த தம்பிக்கு நன்றி என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
 
விசாரணையில் இப்படம் சிங்கப்பூரில் உள்ள தியேட்டரிலிருந்து  ஒளிபரப்பானது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பிரவீண் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.