1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (17:43 IST)

டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் ! இரான் அரசு சேனல் அறிவிப்பு ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பி தலையைக் கொண்டு வருபவர்களுக்கு  80 மில்லியன் டாலர்கள் என இரான் அரசு சேனல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள்  வசிக்கும் பலாட் விமான படைதளம் , அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கிரீன் ஜோன் ஆகியவை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை; ஆனால் ஈராக்கில் உள்ள பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியானது.
 
இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது :
 
அமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் இருந்து வெளியேற்ற அந்நாடு தீர்மானம் கொண்டுவந்துள்ளது துரதிஷ்டவசமானது. அதேசமயம் ஈராக்கின் பாதுகாப்பை அமெரிக்க உறுதி செய்துள்ளது. ஆனால். அமெரிக்கர்களை கொல்ல ஈரான் திட்டம் தீட்டி வருகிறது. 
 
நாங்கள் ஈரானுடன் போர் செய்யவில்லை. எங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க படை ஈராக்கில் சுமூக நிலை ஏற்பட ராணுவம் மூலம் பல சேவைகள் செய்துள்ளோம் என அந்தத் தொகையை திருப்பித் தராத வரையில் அங்கிருந்து வெளியேற மாட்டோம் எனவும் அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈரான் நாட்டின்  மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை  தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஈரானின் அரசு சேனல் ஒன்று  அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, இரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசுத் தொகையை  நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.