செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:35 IST)

பத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு படுகொலை: அப்பட்டமாய் நாடகமாடும் சவுதி அரசு

பத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி அதிபர்  கூறியுள்ளார்.
 
சமீபத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற துருக்கி பத்திரிகையாளரான ஜமால்கஷோஜி காணாமல் போனார். அவர் தொடர்ந்து சவுதி அரேபிய அரசை விமர்சித்து பேசி வந்ததால், சவுதி அரேபியா தான் ஜமாலை ஏதோ செய்துவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தொடந்து இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது.
 
இந்நிலையில் ஜமால்கசோஜி கொலை செய்யப்பட்டுவிட்டதாக சவுதி அரேபியா கூறியது. சில தீவிரவாத அமைப்பினர் ஜமாலை கொன்றுவிட்டதாகவும் இந்த நிகழ்விற்கும் அரசுக்கும் சம்மந்தமில்லை எனவும் கூறியது.
 
ஆனால் சிசிடிவி காட்சிகளை கொண்டு பரிசோதித்ததில் இது தற்செயலாய் நடைபெற்ற நிகழ்வில்லை என்றும் இந்த படுகொலை திட்டமிட்டு செய்யப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் கொல்லப்பட்ட ஜமாலின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளதாக துருக்கி அரசு குற்றம்சாட்டியுள்ளது. 
 
மேலும் பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் சவுதிஅரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.