செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (14:16 IST)

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

கேரளாவில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீதான பாலியல் புகார் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் என்பவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குரியகோஸ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குரியகோஸ் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிரியர் குரியகோஸ் முக்கிய சாட்சியாக இருந்தார் என்பதும், அவர் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பல கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குரியகோஸ் மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்த பஞ்சாப் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது