சவுதி மன்னரின் ஆட்சியை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை: பெரும் பரபரப்பு
சவுதி அரேபியா நாட்டின் பத்திரிகையாளர் 59 வயது ஜமால் கசோக்கி என்பவர் கடந்த 2-ம் தேதி மாயமான நிலையில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் தூதரக அலுவலகத்துக்குள் சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் ஜமால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.